Editorial / 2019 ஜனவரி 08 , பி.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் செட்டேஸ்வர் புஜாரா முன்னேறினார்.
நான்காமிடத்தில் முன்னர் காணப்பட்ட புஜாரா, அவுஸ்திரேலியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் 193 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை, முதல் 10 துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இடம்பெற்ற மற்றைய மாற்றமாக, பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 78 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் ஏய்டன் மர்க்ரம் ஏழிடங்கள் முன்னேறி பத்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் வேர்ணன் பிலாந்தர், நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார். இதுதவிர, ஆறாமிடத்திலிருந்த இரவீந்திர ஜடேஜா, அவுஸ்திரேலியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago