Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 89 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே இன்று வெளியிடப்பட்ட தரவரிசையில், நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தை கேன் வில்லியம்சன் அடைந்துள்ளார்.
இதேவேளை, குறித்த டெஸ்டில் 75 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் அஜின்கியா ரஹானே, ஒன்பதாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி எட்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த டெஸ்டில் 92 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் மாயங்க் அகர்வால், 12ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மேற்குறித்த டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்து 15ஆம் இடத்திலிருந்து ஒன்பது இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தை நியூசிலாந்தின் டிம் செளதி அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago