Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் அணித்தலைவர் லியனல் மெஸ்ஸியின் ஒப்பந்தத்தை, அந்நாட்டுப் பத்திரிகை எல் முன்டோவுக்கு கசிய விட்டதில் பங்கெடுத்ததை பார்சிலோனாவின் முன்னாள் தலைவர் ஜொசெப் மரியா பார்டொமு மறுத்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட மெஸ்ஸியின் நான்காண்டு ஒப்பந்தமானது நேற்று முழுமையாக வெளியிடப்பட்டதுடன், இதன் மூலம் ஒப்பந்த காலத்தில் மெஸ்ஸி 555 மில்லியன் யூரோக்களுக்கு மேல் பெறுவதை வெளிப்படுத்தியிருந்தது. இதன் மூலம் தடகள வீரர்களில் அதிக ஊதியம் பெற்றவராக மெஸ்ஸி மாறியிருந்தார்.
இந்நிலையில், எல் முன்டோவுக்கெதிராகவும், பார்சிலோனாவிலிருந்து கசிய விட பங்கெடுத்ததாக கண்டுபிடிக்கப்பட்ட எவருக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க மெஸ்ஸி திட்டமிட்டுள்ளதாக தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
மெஸ்ஸியுடனான உறவு மோசமான நிலையில் இருந்த நிலையில், கடந்தாண்டு ஒக்டோபர் மாதத்தில் பார்சிலோனாவிலிருந்து பார்டொமு இராஜினாமா செய்திருந்தார்.
16 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
4 hours ago