Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான நான்காவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில்
இங்கிலாந்து வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், ட்ரினிடாட்டில் நேற்று அதிகாலை நடைபெற்ற
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மே. தீவுகளின் அணித்தலைவர் றொவ்மன் பவல்,
இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, பில் ஸோல்டின் 119 (57),
அணித்தலைவர் ஜொஸ் பட்லரின் 55 (29), லியாம் லிவிங்ஸ்டோனின் ஆட்டமிழக்காத 54 (21),
வில் ஜக்ஸின் 24 (09) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 268 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மே. தீவுகள், 15.3
ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில்,
அன்ட்ரே ரஸல் 51 (25), நிக்கலஸ் பூரான் 39 (15), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 36 (15)
ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக ஸோல்ட் தெரிவானார். இரண்டு அணிகளுக்குமிடையிலான ஐந்தாவது போட்டியானது நாளை அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago