Shanmugan Murugavel / 2021 ஜூன் 30 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் ஓர் ஓட்டத்தால் தென்னாபிரிக்கா வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், கிரனெடாவில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் கெரான் பொலார்ட், தென்ன்னாபிரிக்காவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, குயின்டன் டி கொக்கின் 72 (51) ஓட்டங்கள் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றபோதும், ஒபெட் மக்கோயிடம் 4, டுவைன் பிராவோவிடம் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களையே தென்னாபிரிக்கா பெற்றது, மக்கோய் நான்கு ஓவர்களில் 22 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்ததுடன், பிராவோ 25 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்தார்.
பதிலுக்கு, 168 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ஏறத்தாழ அனைவரும் ஆரம்பங்களைப் பெற்றபோதும், தப்ரையாஸ் ஷம்சி (2), அன்றிச் நொர்ட்ஜேயிடம் (2), லுங்கி என்கிடியிடம் (1) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களையே பெற்று ஓர் ஓட்டத்தால் தோல்வியடைந்தது. இதில், ஷம்சி நான்கு ஓவர்களில் 13 ஓட்டங்களையும், நொர்ட்ஜே 29, என்கிடி மூன்று ஓவர்களில் 22 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக ஷம்சி தெரிவானார்.
38 minute ago
3 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
19 Apr 2026