S.Sekar / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை கிரிக்கட் சுற்றுப் பயணம் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட்ட நிர்வாகத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆதர் மற்றும் விளையாட்டு வீரரான லஹிரு திரிமான்ன ஆகியோர் கொவிட்-19 தொற்றுக் ஆளாகியிருந்ததைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த இலங்கை அணிக் குழாமின் அங்கத்தவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள அணியைச் தெரிவு செய்வதற்காக 35 வீரர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, அவர்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மிக்கி ஆதர் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு தொற்றுக் காணப்பட்டமை கண்டறியப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அண்மையில் இடம்பெற்ற சதீர சேனநாயக்கவின் திருமண வைபவத்தில் லஹிரு திரிமான்ன அடங்கலாக பிரபல கிரிக்கட் வீரர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
14 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago