Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 17 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தை மர்னுஷ் லபுஷைன் தவறவிடுகின்றார்.
தற்போது இங்கிலாந்தில் கிளார்மோகன் கவுண்டிக்காக விளையாடி வரும் லபுஷைன், கொவிட்-19 பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் காரணமாகவே குறித்த சுற்றுப்பயணத்தைத் தவற விடுகின்றார்.
இந்நிலையில், தனிப்பட்ட, உளநலன் காரணமாக தன்னைக் கருத்திற் கொள்ள வேண்டாமென டேனியல் சாம்ஸ் தெரிவித்த நிலையில், தெரிவாகிய ஆரம்ப கட்ட குழாம் பின்வருமாறு,
குழாம்: ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), டேவிட் வோணர், டார்சி ஷோர்ட், ஸ்டீவன் ஸ்மித், ஜொஷ் பிலிப், அலெக்ஸ் காரி, மத்தியூ வேட், கிளென் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மொய்ஸன் ஹென்றிக்கஸ், மிற்செல் மார்ஷ், அஸ்தன் அகர், அடம் ஸாம்பா, மிற்செல் ஸ்வப்ஸன், தன்வீர் சங்ஹா, பற் கமின்ஸ், மிற்செல் ஸ்டார்க், ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப், ஜொஷ் ஹேசில்வூட், றிலே மெரெடித், ஜஹை றிச்சர்ட்ஸன், கேன் றிச்சர்ட்ஸன், அன்றூ டை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago