Editorial / 2018 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது.
முதலாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும் இரண்டாவது போட்டியை பங்களாதேஷும் வென்றிருந்த நிலையில், லெளடர்ஹில்லில் இன்று காலை இடம்பெற்ற தீர்க்கமான மூன்றாவது போட்டியை பங்களாதேஷ் வென்றதன் மூலமே தொடரை 2-1 என்ற ரீதியில் கைப்பற்றியது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், லிட்டன் தாஸ் 61 (32), மகமதுல்லா ஆட்டமிழக்காமல் 32 (20), ஷகிப் அல் ஹஸன் 24 (22), தமிம் இக்பால் 21 (13) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அணித்தலைவர் கார்லோஸ் பிறத்வெய்ட், கீமோ போல் ஆகியோர் தலா 2, கெஷ்ரிக் வில்லியம்ஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 185 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 17.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதுடன் போட்டி முடிவுக்கு வர 19 ஓட்டங்களால் டக் வேர்த் லூயிஸ் முறையில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியடைய தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியது. துடுப்பாட்டத்தில், அன்ட்ரே ரஸல் 47 (21) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், முஸ்தபிசூர் ரஹ்மான் 3, ஷகிப் அல் ஹஸன், ருபெல் ஹொஸைன், செளமியார் சர்கார், அபு ஹைதர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனஆக லிட்டன் தாஸ் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக ஷகிப் அல் ஹஸன் தெரிவானார்.
14 minute ago
33 minute ago
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
42 minute ago
47 minute ago