Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து வென்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த நியூசிலாந்து, வெலிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டை இன்று இனிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்களால் வென்றமையைத் தொடர்ந்தே தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
நியூசிலாந்து: 460/10 (துடுப்பாட்டம்: ஹென்றி நிக்கொல்ஸ் 174, நீல் வக்னர் ஆ.இ 66, வில் யங்க் 43, டரைல் மிற்செல் 42, பி.ஜெ வட்லிங்க் 30, டொம் லேதம் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனொன் கப்ரியல் 3/93, அல்ஸாரி ஜோசப் 3/109, சேமர் ஹோல்டர் 2/110, றொஸ்டன் சேஸ் 2/54)
மே. தீவுகள்: 131/10 (துடுப்பாட்டம்: ஜெர்மைன் பிளக்வூட் 69 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 5/32, கைல் ஜேமிஸன் 5/34)
பொலோ ஒன் மே. தீவுகள்: 317/10 (துடுப்பாட்டம்: ஜோன் கம்பெல் 68, ஜேஸன் ஹோல்டர் 61, ஜோஷுவா டா சில்வா 57, ஷமராஹ் ப்ரூக்ஸ் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 3/54, ட்ரெண்ட் போல்ட் 3/96, கைல் ஜேமிஸன் 2/43, டிம் செளதி 2/96)
போட்டியின் நாயகன்: ஹென்றி நிக்கொல்ஸ்
தொடரின் நாயகன்; கைல் ஜேமிஸன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
58 minute ago