2025 ஜூலை 05, சனிக்கிழமை

மோசடிக்காக ஐ.அ. அமீரக வீரர்கள் இடைநிறுத்தம்

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் அணித்தலைவரும், சிரேஷ்ட வீரர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான விதிகளை மீறியதாக சர்வதேச கிரிக்கெட் சபையால் 13 குற்றச்சாட்டுகளை குறித்த போட்டிகள் ஆரம்பிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பதாக நேற்று  எதிர்கொண்டுள்ளனர்.

அந்தவகையில், முன்னாள் அணித்தலைவர் மொஹமட் நவீட், சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் ஷைமன் அன்வன், சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் குவாதீர் அஹ்மட் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தொழில்முறையாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனின் கிர்க்கெட்டில் பங்கேற்ற மெஹர்டீப் சஹயகாரும் மோசடிக்கெதிரான நடத்தைக் கோவையை பல இடங்களில் மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இருபதுக்கு – 20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின்போது போட்டிகளை தாம் மோசடி செய்யும் முயற்சிகளிலேயே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்த மொஹமட் நவீட் குழாமிலிருந்து இவ்வார ஆரம்பத்தில் விலக்கப்பட்டிருந்த நிலையில், அந்நேரத்தில் எதுவிதக் காரணமும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .