Shanmugan Murugavel / 2016 ஜனவரி 20 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டியில், அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 348 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட்டுக்காக, டேவிட் வோணர், ஆரொன் பின்ச் இருவரும் 187 ஓட்டங்களைப் பகிர்ந்து, அவுஸ்திரேலியாவுக்கான சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். ஆரொன் பின்ச் 107 (107), டேவிட் வோணர் 93 (92), ஸ்டீவன் ஸ்மித் 51 (29), கிளென் மக்ஸ்வெல் 41 (20) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 10 ஓவர்களில் 77 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 10 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
349 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்ட இந்திய அணி, 49.2 ஓவர்களில சகல விக்கெட்டுகளையும் இழந்து 323 ஓட்டங்களைப் பெற்று, 25 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. முதலாவது விக்கெட்டுக்காக 8 ஓவர்களில் 65 ஓட்டங்கள் பகிரப்பட்டதோடு, விராத் கோலி, ஷீகர் தவான் இருவரும் அதிரடியாக ஆடி, இந்திய அணிக்கான சிறப்பான இனிங்ஸை வழங்கினர். ஆனால், வெற்றிபெறுவதற்கு 72 ஓட்டங்களே காணப்பட்ட நிலையில் ஷீகர் தவான் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த அனைத்து வீரர்களும் சறுக்கினர்.
துடுப்பாட்டத்தில் ஷீகர் தவான் 126 (113), விராத் கோலி 106 (92), றோகித் ஷர்மா 41 (25) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக கேன் றிச்சர்ட்ஸன் 10 ஓவர்களில் 68 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர, மிற்சல் மார்ஷ், ஜோன் ஹேஸ்டிங்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக, கேன் றிச்சர்ட்ஸன் தெரிவானார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago