2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

மீண்டும் சிக்கினார் சுனில் நரைன்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 09 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், பந்தை வீசியெறிகிறார் என்ற சந்தேகம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் முடிவிலேயே, போட்டி மத்தியஸ்தர்களால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 14 நாட்களுக்குள் பந்துவீச்சுக்கான சோதனைக்கு உள்ளாக வேண்டுமென்பதோடு, முடிவுகள் வெளிவரும் வரை அவரால் தொடர்ந்து பந்துவீச முடியும்.

ஏற்கெனவே, கடந்தாண்டு சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு-20 தொடரில் அவரது பந்துவீச்சுக் குறித்து முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட போதிலும், சர்வதேசப் போட்டியொன்றில் அவர் மீது முறைப்பாடு மேற்கொள்ளப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இவ்வாண்டு இடம்பெற்ற இந்தியன் பிறீமியர் லீக் தொடரிலும், அவரது பந்துவீச்சு மீது முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு, இரண்டு தடவைகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டார். இறுதியில், 'இறுதி எச்சரிக்கை"யுடன், பந்துவீச அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .