Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 24 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகமான செல்சியானது, முன் கள வீரரான டிடியர் ட்ரொக்பாவின் எதிர்காலம் குறித்து அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மொன்றியல் இம்பக்குடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துகிறது.
தனது, பழைய கால்பந்தாட்டக் கழகமான செல்சிக்கு உதவும் ஆர்வத்தை ட்ரொக்பா வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ள மொன்றியல் இம்பக்ட், எனினும் ட்ரொக்பாவை மேலுமொரு பருவ காலத்துக்கு வைத்திருப்பதே தங்களது நோக்கமாகும் என அக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலையில், மொன்றியல் இம்பக்குடன் ஒப்பந்தத்தை மேற்கொண்ட 37 வயதான ட்ரொக்பா, கடந்த சனிக்கிழமை (19), சந்தர்லேண்ட் அணியுடன் செல்சி வெற்றி பெற்ற போட்டியை, செல்சியின் இடைக்காலப் பயிற்சியாளர் கூஸ் ஹிட்டிங், செல்சியின் உரிமையாளர் ரோமன் அப்றமோவிச்சுடன் இணைந்து பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில், ட்ரொக்பா, செல்சியின் பயிற்சியாளர் குழாமில் இணைந்து கொள்வாரா என்று ஹிட்டிங்கை வினவியபோது, அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்திருந்தார்.
ஐவரிகோஸ்ட் நாட்டு வீரரான ட்ரொக்பா, 2004ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை செல்சிக்காக விளையாடியதோடு, பின்னர் கடந்த பருவகாலத்திலும் செல்சிக்காக விளையாடி, மொத்தம் ஒன்பது வருடங்கள் செல்சியில் இருந்தார்.
கடந்த பருவகால பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சி, இந்தப் பருவகாலத்தில் தற்போது வரை 17 போட்டிகளில் விளையாடி ஒன்பது போட்டிகளில் தோல்வியடைந்து, பிறீமியர் லீக் தரவரிசையில் 15ஆவது இடம் வகிக்கின்றது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago