2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மீண்டும் தோற்றது செல்சி

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் தொடரில் முன்னேற்றத்தைக் கொண்டிருந்தாலும் தொடர்ச்சியாக இங்கிலாந்து பிறிமியர் லீக் போட்டிகளில் செல்சி கால்பந்தாட்டக் கழகமானது அடிமேல் அடிவாங்கி வருகிறது. இதன் மூலம், அக்கழகத்தின் பயிற்சியாளரான ஜோஸ் மொரின்கோவின் மீதான அழுத்தமும் அதிகரித்து வருகிறது.

கடந்த திங்கட்கிழமை (14), லெய்செஸ்டர் சிற்றிக்கும் செல்சிக்குமிடையேயான போட்டியில் லெய்செஸ்டர் சிற்றியானது 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனாலேயே, மொரின்கோ மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.

போட்டியின் 34ஆவது நிமிடத்திலேயே லெய்செஸ்டர் சிற்றியின் ஜெர்மி வர்டி, இந்தப் பருவகாலத்தில் தனது 15ஆவது கோலைப் பெற்று தனது அணிக்கு முன்னிலை வழங்கினார். தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 48ஆவது நிமிடத்தில் ரியாட் மஹ்ரேஸ். கோலோன்றினைப் பெற்று லெய்செஸ்டர் சிற்றிக்கு 2-0 என்ற முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்து போட்டியின் 65ஆவது நிமிடத்தில் செல்சிக்காக மாற்று வீரராக களமிறங்கிய லொயிக் ரெமி, போட்டியின் 77ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்றார். எனினும் அதன்பிறகு எந்தவொரு கோல்களும் பெறப்படாத நிலையில், 2-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியையடுத்து இங்கிலாந்து பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு லெய்செஸ்டர் சிற்றி வந்துள்ளது. மறுகணத்தில் தற்போதைய சம்பியன்களாக செல்சி. 16ஆவது இடத்துக்கு கீழிறங்கி உள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .