2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மீண்டும் வருகிறார் கிறேம் ஸ்மித்?

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 08 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கிறேம் ஸ்மித், சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் பங்குபற்றுவது குறித்த தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.

117 டெஸ்ட் போட்டிகளிலும் 197 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 33 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றிய கிறேம் ஸ்மித், கடந்தாண்டு மார்ச் மாதத்துடன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார்.

33 வயதாக இருக்கும்போது ஓய்வுபெற்ற அவர், தற்போது 34 வயதாகக் காணப்படுகிறார். தற்போது, மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட ஆயத்தமாகிவருகிறார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், 'மீண்டுமொருமுறை சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற வேண்டுமா என்ற விளிம்பில் நான் நிற்கிறேன். எனக்குத் தற்போது 34 வயது. ஓய்வுபெறும்போது 33. நான் இன்னும் 3 அல்லது 4 வருடங்கள் அதிகமாக விளையாட முடியுமா என்ற கேள்வி, எப்போதுமே இருந்தது. என்னால் முடியுமென எனக்குத் தெரியும். ஆனால்... நான் இம்முடிவில் விளிம்பில் இருக்கிறேன். மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட விரும்புகிறேன், அங்கிருந்து முடிவெடுக்க முடியும்" என்றார்.'யாருக்குத் தெரியும்? சர்வதேசப் போட்டிகளில் மீள வருவதற்கான தளமாக, இப்போட்டிகள் அமையக்கூடும்" என்றார்.

மீள விளையாடுவது குறித்த கேள்விகள் அதிகளவு கேட்கப்படுவதாகத் தெரிவித்த அவர், இந்தியாவில் இடம்பெற்ற தொடரில் தென்னாபிரிக்கா தடுமாறிய நிலையில், மீள வருவது குறித்த எண்ணம், அதிகமாக ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .