Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தமைக்கான முக்கியமான காரணங்களாக, முதல் இனிங்ஸில் இலங்கை பந்து வீசிய விதத்தையும் அவ்வணியின் முதல் துடுப்பாட்ட இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய விதத்தையும், அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் பந்துவீசத் தீர்மானித்த இலங்கை அணி, ஓர் ஓவருக்கு 4.48 ஓட்டங்கள் என்ற அடிப்படையில் 431 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தது. துடுப்பெடுத்தாடும் போது, 294 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.
'மோசமான பந்துகள் பலவற்றை வீசியிருந்தோம். நியூசிலாந்து போன்ற துடுப்பாட்ட வரிசைக்கெதிராக அவ்வாறு பந்துவீச முடியாது. ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை எடுக்க வேண்டியிருந்தது, ஆனால் அதை நாம் செய்திருக்கவில்லை" என மத்தியூஸ் தெரிவித்தார்.
'அத்தோடு, முதல் இனிங்ஸ் துடுப்பாட்டத்தில், அதிக கவனத்துடன் விளையாடியிருந்தோம். அவர்களை நாம், எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகம் மதித்தோம்" என அவர் குறிப்பிட்டார்.
கருத்துத் தெரிவித்த நியூசிலாந்து அணித்தலைவர், இலங்கை அணிக்கெதிராக முடிவுகளைப் பெறுவது கடினமானது எனவும், 5ஆவது நாளில் மத்தியூஸூம் டினேஷ் சந்திமாலும் காணப்பட்ட நிலையில், கடினமான வேலையாக அமையும் என்பதை அறிந்திருந்ததாகவும் தெரிவித்தார். அவர்களிருவரும் உலகத்தரமிக்க துடுப்பாட்ட வீரர்கள் எனத் தெரிவித்த அவர், அடுத்த போட்டியிலும், நியூசிலாந்து அணிக்குக் கடும் சவாலாக அவர்கள் அமைவார்கள் எனக் குறிப்பிட்டார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago