2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

முதலிடத்தில் ப்ரோட்: இரண்டாமிடத்தில் றூட்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 17 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணிக்கெதிராக 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற 3ஆவது போட்டியின் நிறைவில் வெளியிடப்பட்டுள்ள வீரர்களுக்கான தரப்படுத்தலில், பந்துவீச்சாளர்களில் முதலிடத்தை இங்கிலாந்தின் ஸ்டுவேர்ட் ப்ரோட் பெற்றுக் கொண்டுள்ளதோடு, துடுப்பாட்டத்தின் இரண்டாமிடத்தை ஜோ றூட் பெற்றுக் கொண்டுள்ளார்.

இப்போட்டியின் இரண்டாவது இனிங்ஸில், 12.1 ஓவர்களில் 6 ஓட்டமற்ற ஓவர்கள் உள்ளடங்கலாக 17 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்த ஸ்டுவேர்ட் ப்ரோட், 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். மறுபுறத்தில், சதம் பெற்ற ஜோ றூட், இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இதன்படி, துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியல் பின்வருமாறு:

1. ஸ்டீவன் ஸ்மித் 2. ஜோ றூட் 3. கேன் வில்லியம்ஸன் 4. ஏபி டி வில்லியர்ஸ் 5. டேவிட் வோணர் 6. யுனிஸ் கான்
7. அஞ்சலோ மத்தியூஸ் 8. ஹஷிம் அம்லா 9. மிஸ்பா உல் ஹக் 10. அஜின்கியா ரஹானே

பந்துவீச்சாளர்கள்:

1. ஸ்டுவேர்ட் ப்ரோட் 2. இரவிச்சந்திரன் அஷ்வின் 3. டேல் ஸ்டெய்ன் 4. யாசிர் ஷா 5. ஜேம்ஸ் அன்டர்சன் 6. ரவீந்திர ஜடேஜா 7. ட்ரென்ட் போல்ட் 8. ஜொஷ் ஹேஸல்வூட் 9. டிம் சௌதி 10. வேர்ணன் பிலாந்தர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .