Shanmugan Murugavel / 2016 ஜூலை 06 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னாள் முகாமையாளர் லூயிஸ் வான் காலை விட, தற்போதைய முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோ, மிகுந்த முன்னேற்றகரமானவராக இருப்பார் என்று மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முன்னாள் முகாமையாளர் அலெக்ஸ் ஃபேர்கியூஸன் தெரிவித்துள்ளார்.
26 வருடங்கள் முகாமையாளராக இருந்து, 13 பிறீமியர் லீக் பட்டங்களையும் இரண்டு சம்பியன்ஸ் லீக்கையும் வென்ற ஃபேர்கியூஸன் விலகி, மூன்று வருடங்களுக்குப் பின்னர் கடந்த மே மாதம் மொரின்ஹோ முகாமையாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த ஃபேர்கியூஸன், மொரின்ஹோ மிகுந்த முன்னேற்றகரமானவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார். தவிர, இரண்டாவது தடவையாக மொரின்ஹோ செல்சிக்கு சென்றது தவறென தான் நினைப்பதாகவும் மேலும் ஃபேர்கியூஸன் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தடவையாக செல்சியின் முகாமையாளராக இருந்த போது, பிறீமியர் லீக் பட்டத்தை வென்று, ஏழு மாதங்களின் பின்னர், கடந்த டிசம்பரில் செல்சியால் மொரின்ஹோ பதவி விலக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago