Editorial / 2017 ஜூலை 31 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

செல்சி அணியின் மத்தியகள வீரரான நெமன்ஜா மட்டிக், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியால் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். இதற்கான மருத்துவ பரிசோதனையில், அவர் நேற்று (30) ஈடுபட்டார் என அறிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் செல்சி அணியின் முகாமையாளராக இருந்த ஜொஸெ மொரின்யோ, தற்போது மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளராக உள்ள நிலையில், தனது முன்னைய கழகத்தைச் சேர்ந்த மட்டிக்கை ஒப்பந்தம் செய்ய முயன்று வந்தார்.
இந்நிலையிலேயே, சுமார் 40 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் பெறுமதியில், மட்டிக், ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.
அவரை ஒப்பந்தம் செய்வது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படாத போதிலும், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் பயிற்சி ஆடையில், மட்டிக் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. எனவே, அவரது ஒப்பந்தம், உறுதியாக ஏற்படுத்தப்படவுள்ளது.
சேர்பியாவைச் சேர்ந்த மட்டிஸ், இதற்கு முன்னர் பென்பிகா அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த போது, 2014ஆம் ஆண்டு ஜனவரியில், செல்சி அணிக்காக, மொரின்யோவால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஏற்கெனவே, 30 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு விக்டர் லின்டெலோபையும், 75 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு றொமேலு லூகாகுவையும், மன்செஸ்டர் யுனைட்டெட் அணி, ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
25 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
55 minute ago
1 hours ago