Shanmugan Murugavel / 2016 ஜூன் 17 , மு.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 தொடரின் வேல்ஸ் அணிக்கெதிரான குழு பி போட்டியில், த்ரில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
வேல்ஸ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின் 42ஆவது நிமிடத்தில், வேல்ஸ் அணிக்கு கிடைத்த 'பிறீ கிக்' மூலம், அவ்வணியின் நட்சத்திர வீரர் கரித் பேல் பெற்ற கோலின் மூலம், முதற்பாதியில் அவ்வணி முன்னிலை பெற்றது.
எனினும், இரண்டாவது பாதியில், இங்கிலாந்தின் ஹரி கேன், ரஹீம் ஸ்டேர்லிங்குக்கு களமிறக்கப்பட்ட ஜேமி வார்டி, போட்டியின் 56ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் காரணமாக கோல் எண்ணிக்கை சமநிலையானதோடு, டேனியல் ஸ்டரிட்ஜ் போட்டியின் இறுதிக்கணத்தில் பெற்ற கோலின்காரணமாக இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது.
இதேவேளை, வடக்கு அயர்லாந்து, உக்ரேய்ன் அணிகளுக்கிடையிலான போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற வடஅயர்லாந்து அணி, யூரோ கிண்ணத்தில், தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்துகொண்டது.
இந்நிலையில், ஜெர்மனி, போலந்து அணிகளுக்கிடையிலான குழு சி போட்டியொன்றில், இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago