Shanmugan Murugavel / 2015 நவம்பர் 18 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிக் கட்டப் போட்டிகளுக்கு, உக்ரைன் தகுதிபெற்றுள்ளது. ஸ்லோவேனிய அணிக்கெதிரான போட்டியைச் சமநிலையில் முடித்தே, தங்களது இடத்தை உக்ரைன் உறுதிப்படுத்தியது.
இப்போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்லோவேனிய அணிக்கெதிராக, 1-1 என்ற கோல் கணக்கிலான சமநிலை முடிவைப் பெற்றுக் கொண்ட உக்ரைன், இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தகுதிபெற்றது.
இதன்படி, யூரோ 2016இல் பங்குபற்றும் அனைத்து அணிகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதன்படி தகுதிபெற்றுள்ள அணிகளின் விவரம்:
குழு 1: ஸ்பெய்ன், ஜேர்மனி, இங்கிலாந்து, போர்த்துக்கல், பெல்ஜியம்
குழு 2: இத்தாலி, ரஷ்யா, சுவிட்ஸர்லாந்து, ஒஸ்திரியா, குரோஷியா, உக்ரைன்
குழு 3: செக் குடியரசு, ஸ்வீடன், போலந்து, றோமானியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி
குழு 4: துருக்கி, அயர்லாந்துக் குடியரசு, ஐஸ்லாந்து, வேல்ஸ், அல்பேனியா, வட அயர்லாந்து.
5 minute ago
6 minute ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
08 Apr 2026