Shanmugan Murugavel / 2016 ஜூன் 13 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் யூரோ 2016 தொடரில் இடம்பெற்ற போட்டிகளில், ஜேர்மனி, போலந்து, குரோஷிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
ஜேர்மனிக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது. போட்டியின் 19ஆவது நிமிடத்தில் ஷ்கோட்ரன் முஸ்தபியும் 90ஆவது நிமிடத்தில் பஸ்டியன் ஸ்வானேஸ்கரும் பெற்ற கோல்களின் உதவியுடன், ஜேர்மனி வெற்றிபெற்றது.
போலந்து அணிக்கும் வட அயர்லாந்து அணிக்குமிடையிலான போட்டியில், போலந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. போலந்து அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை, 51ஆவது நிமிடத்தில் அர்க்கடியுஸ் மிலிக் பெற்றுக் கொடுத்தார்.
குரோஷிய அணிக்கும் துருக்கி அணிக்குமிடையிலான போட்டியில், குரோஷிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணி சார்பாக 41ஆவது நிமிடத்தில் லூகா மோட்ரிக், கோலைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago