Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரில் ஒன்பது பேருடன் விளையாடிய ரயோ வல்லேகனோ என்ற குட்டி அணியை பந்தாடிய ரியல் மட்ரிட், 10-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ரியல் மட்ரிட் அணி சார்பாக கரித் பலே நான்கு கோல்களையும், கரீம் பென்ஸீமா மூன்று கோல்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களையும் டனிலோ ஒரு கோலையும் பெற்றனர். ரயோ வல்லேகனோ அணி சார்பாக அன்டோனியோ அமயா, ஜோஸாபெட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
இந்த வெற்றியுடன் லா லிகா புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் 33 புள்ளிகளைப் பெற்றுள்ள ரியல் மட்ரிட், முதலிடத்தில் உள்ள பார்சிலோனா, அட்லெட்டிகோ மட்ரிட்டை விட இரண்டு புள்ளிகள் பின் தங்கியுள்ளது.
47 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago
5 hours ago