Shanmugan Murugavel / 2024 ஜூன் 05 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டில், தனது பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனுடனான ஒப்பந்தம் இம்மாதம் 30ஆம் திகதி முடிவடையும்போது இணையும் ஒப்பந்தமொன்றில் கிலியான் மப்பே கைச்சாத்திட்டுள்ளார்.
வாய்மொழி ரீதியாக மட்ரிட்டில் இணைய இவ்வாண்டு பெப்ரவரியில் இணங்கியிருந்த 25 வயதான மப்பே, பருவகால முடிவில் பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து விலகவுள்ளதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
எதிர்வரும் 2029ஆம் ஆண்டு வரையான ஒப்பந்தத்துக்கு மட்ரிட்டுடன் இணங்கியுள்ள மப்பே, பருவகாலமொன்றுக்கு 15 மில்லியன் யூரோக்களைப் பெறவுள்ளதுடன், மேலதிகமாக கைச்சாத்திடும் 150 மில்லியன் யூரோக்களையும் பெறவுள்ளார் என்பதோடு, தனது காப்புரிமைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை தான் வைத்துக் கொள்ளவுள்ளார்.
10 minute ago
32 minute ago
34 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
32 minute ago
34 minute ago
55 minute ago