2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

றியல் மட்ரிட்டை விட்டு விலகத் திட்டமிடவில்லை

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 06 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியல் மட்ரிட் கழகத்திலிருந்து விலகும் எண்ணம் கிடையாது என,  வேல்ஸ் கால்பந்தாட்ட வீரரான கரத் பேல் தெரிவித்துள்ளார். றியல் மட்ரிட் கழகத்தின் முகாமையாளரான றபேல் பெனிடெஸ் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெனிடெஸூக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் பேல், அவரின் பதவி நீக்கத்தால், கழகத்தை விட்டு விலகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக, செல்சி அணியின் ஈடன் ஹஸார்டும் கரத் பேலும், அணிகளை மாற்றிக் கொள்ளக்கூடும் எனச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையிலேயே, கழகத்திலிருந்து விலகப் போவதில்லை என, உள்வீட்டுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய முகாமையானரான ஸினேடின் ஸிடேனும், பேலுக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸெமா, கரத் பேல் மூவரையும் ஒரே அணியில் விளையாடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .