Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக்கின் இறுதி விளையாட்டாக இடம்பெற்ற ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் சேர்பியாவைத் தோற்கடித்த பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்ற அமெரிக்கா, இறுதித் தங்கப் பதக்கத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டது.
பாதி நேர முடிவில் 52க்கு 29 புள்ளிகள் என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த அமெரிக்க அணி, இறுதியில் 96க்கு 66 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. அந்தவகையில், ஒலிம்பிக்கில் கூடைப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெற்ற 19 தடவைகளில் 15 தடவை அமெரிக்காவே தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்த அமெரிக்க அணியில் இடம்பெற்றிருந்த கெவின் டூர்ரண்ட், இறுதிப் போட்டியில் அதிகமாக 30 புள்ளிகளைப் பெற்றிருந்தார்.
1992ஆம் ஆண்டு பார்சிலோனா ஒலிம்பிக்கின் கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில், குரோஷியாவை 117க்கு 85 என்ற புள்ளிகள் கணக்கில், பாரிய வித்தியாசத்தில் தோற்கடித்த பின்னர், இப்போட்டியில், 96க்கு 66 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தமையே, ஒலிம்பிக் இறுதிப் போட்டியொன்றில் பாரிய புள்ளிகள் வித்தியாசத்தில் பெறப்பட்ட இரண்டாவது வெற்றியாகும்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஸ்பெய்ன், 89க்கு 88 என்ற புள்ளிகள் மயிரிழையில் அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றது.
10 minute ago
22 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
34 minute ago