Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் 17 வருடமாக நிலவிய ஐக்கிய அமெரிக்காவின் மைக்கல் ஜோன்சனின் உலக சாதனையை தகர்த்த தென்னாபிரிக்காவின் வெய்ட் வன் நீகார்க், இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
24 வயதான வன் நீகார்க், போட்டித் தூரத்தை 43.03 செக்கன்களில் கடந்திருந்தார். குறித்த நேரப்பெறுதியானது, 1999ஆம் ஆண்டு ஸ்பெயினின் செவிய்யாவில் இடம்பெற்ற உலக தடகள சம்பியன்ஷிப்பில் ஜோன்சன் பெற்ற நேரப் பெறுதியை விட 0.15 செக்கன்கள் குறைவாகும்.
இதேவேளை, 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற கிரனெடாவின் கிறானி ஜேம்ஸ், போட்டித் தூரத்தைக் கடப்பதற்கு வன் நீகார்க்கை விட 0.73 செக்கன்கள் அதிகமாக எடுத்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றதுடன், ஐக்கிய அமெரிக்காவின் லாஷோன் மெரிற் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில், 400 மீற்றர் ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் வென்ற ஜோன்சன் கருத்துத் தெரிவிக்கையில், விரைவில் உசைன் போல்ட் ஓய்வு பெறவுள்ள நிலையில், வன் நீகார்க் அடுத்த நட்சத்திரமாகலாம் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கு றியோ ஒலிம்பிக்கில் முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த வன் நீகார்க் கருத்துத் தெரிவிக்கையில், சிறு வயது முதல் இது குறித்து கனவு கண்டதாக கூறியுள்ளார்.
47 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago
5 hours ago