2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

றியோ ஒலிம்பிக்: மிளிர்ந்த பெண்கள்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் தோன்றிய சிறந்த விளையாட்டு வீரர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் மைக்கல் ஃபெல்ப்ஸ் (நீச்சல்), உசைன் போல்ட் (குறுந்தூர ஓட்டம்), செரினா வில்லியம்ஸ் (டென்னிஸ்) ஆகியோரின் இறுதி ஒலிம்பிக் போட்டிகளாக அமையுமெனக் கருதப்படும் றியோ ஒலிம்பிக் போட்டிகள், புதிய நட்சத்திரங்களையும் தர மறந்திருக்கவில்லை.

குறிப்பாக, பெண்களின் வருகை, நம்பிக்கையைத் தருவதாக அமைந்திருந்தது.

அமெரிக்காவின் 19 வயதான கேற்ற லெடெக்கி, நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று, வீரர்களுக்கான ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில், இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். அவரது வயதை வைத்துப் பார்க்கும் போது, எதிர்வரும் காலங்களில் அவர் சாதிப்பார் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

அமெரிக்க வரலாற்றில் முதலாவதாகத் தங்கம் வென்ற ஆபிரிக்க அமெரிக்கரான நீச்சல் வீராங்கனை சிமோனி மானுவல்ஸ், அதிக கவனத்தை ஈர்த்தார். அதேபோல், மற்றொரு கறுப்பின வீராங்கனையான சிமோனி பைல்ஸ், தனது 19 வயதில், தனது முதலாவது ஒலிம்பிக் போட்டிகளில் 4 தங்கங்கள் உட்பட 5 பதக்கங்களைப் பெற்று மிளிர்ந்தார்.

அதேபோல், பிரேஸிலின் "கடவுளின் நகரம்" என அழைக்கப்படும் சேரிப் பகுதியிலிருந்து, தங்கம் வென்றவரான றபேலா சில்வா, ஜூடோவில் தங்கம் வென்றதோடு மாத்திரமல்லாது, இறுதி நிகழ்வில், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத் தலைவரால் அவரது பெயர் குறிப்பிடப்படும் அளவுக்குப் புகழ்பெற்றிருந்தார்.

அதேபோல், பெண்கள் இன்னமும் தாழ்வான நிலையிலேயே கணிக்கப்படும் இந்தியாவில், அந்நாட்டுக்கான இரண்டு பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்தவர்களும் பெண்களே என்பது, கவனித்தக்கத்தகதாக அமைந்தது. குறிப்பாக, இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் முதலாவது பதக்கத்தை, பெண்ணான சக்ஷி மலிக் பெற்றுக்கொடுத்து, வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .