Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், மல்லோக்ராவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோல்வியடைந்திருந்தது. மல்லோக்ரா சார்பாகப் பெறப்பட்ட கோலை லாகோ ஜூனியர் பெற்றிருந்தார்.
குறித்த போட்டியில் றியல் மட்ரிட்டின் முன்களவீரரான கரெத் பேல், மத்தியகளவீரர்களான லூகா மோர்ட்ரிட்ச், டொனி க்றூஸ் ஆகியோர் காயம் காரணமாகப் பங்கேற்றிருக்காத நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நான்காவது பிள்ளை பிறந்தமை காரணமாக முன்களவீரர் ஈடின் ஹஸார்ட்டும் இப்போட்டியில் பங்கேற்றிருக்கவில்லை.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற வலென்சியாவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் அத்லெட்டிகோ மட்ரிட் முடித்துக் கொண்டிருந்தது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை டியகோ கொஸ்டா பெற்றிருந்தார். வலென்சியா சார்பாகப் பெறப்பட்ட கோலை டேனியல் பரெஜோ பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஐபாரின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றிருந்தது. பார்சிலோனா சார்பாக, அன்டோனி கிறீஸ்மன், லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் லா லிகா புள்ளிகள் பட்டியலில் 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் பார்சிலோனா காணப்படுகின்றது. 18 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் றியல் மட்ரிட்டும், 17 புள்ளுகளுடன் மூன்றாமிடத்தில் கிரெனடாவும், 16 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago