Editorial / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற போட்டியொன்றில், லிவர்பூலை, 5-0 என்ற கோல் கணக்கில், மன்செஸ்டர் சிற்றி தோற்கடித்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, கப்ரியல்ஸ் ஜெஸூஸ், லெரோய் சனே ஆகியோர் தலா 2 கோல்களையும் சேர்ஜியோ அக்ரோ ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், லெய்செஸ்டர் சிற்றியை, 2-1 என்ற கோல் கணக்கில், நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்கள் செல்சி வென்றதுடன், எவெர்ற்றனை, 3-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்கடித்தது. தவிர, போர்ண்மெத்தை, 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோற்கடித்தது. மன்செஸ்டர் யுனைட்டெட், ஸ்டோக் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago