Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான லீக் 1 தொடரில், லொரியன்டின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது.
பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் நெய்மர் பெற்றிருந்ததோடு, லொரியன்ட் சாப்ராக லோரன் அபெர்கெல், யொனெ விஸ்ஸா, டெரெம் மொஃபி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், லீக் 1 புள்ளிகள் பட்டியலில் 48 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லில்லி காணப்படுகின்றது. 46 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லயோனும், 45 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனும், 42 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் மொனாக்கோவும் காணப்படுகின்றன.
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago