Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 22 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் யாப்புத் தொடர்பாகவும் அது இயங்கும் முறை தொடர்பாகவும், தனது இறுதி அறிக்கையை, லோதா செயற்குழு, அடுத்தாண்டு ஜனவரி 4ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளது.
இந்திய உச்சநீதிமன்றத்தால் இப்பணியை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட இச்செயற்குழு, நீதிமன்றத்திடமும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடமும், ஒரே நேரத்தில் கையளிக்குமெனத் தெரிகிறது.
சமர்ப்பிக்கப்படும் இந்த அறிக்கையை, கிரிக்கெட் சபை நிச்சயமாகப் பின்பற்ற வேண்டுமென்பதை, உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இது முக்கியம் பெறுகிறது.
ஏற்கெனவே, இந்தியன் பிறீமியர் லீக்கில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரித்திருந்த இச்செயற்குழு, சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளைத் தடை செய்யுமாறு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் லோதா தலைமையிலான இக்குழுவில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர்களான அஷோக் பான், ஆர்.வி இரவீந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago