Shanmugan Murugavel / 2015 நவம்பர் 30 , மு.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
லா லிகா கால்பந்தாட்டத் தொடரில், ஏய்வர் அணிக்கெதிரான போட்டியில் றியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றுள்ளது. இதற்கு முன்னர் இடம்பெற்ற பார்சிலோனா அணிக்கெதிரான போட்டியில் 0-4 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்திருந்த நிலையிலேயே, இந்த வெற்றியை றியல் மட்ரிட் பெற்றுள்ளது.
போட்டியின் 43ஆவது நிமிடத்தில், கரத் பேல் பெற்றுக் கொடுத்த கோலின் உதவியுடன், 1-0 என்ற முன்னிலையை, றியல் மட்ரிட் அணி பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து, போட்டி நிறைவடையும் நேரத்தில், 82ஆவது நிமிடத்தில், கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோலாக்கி, 2-0 என்ற முன்னிலையை வழங்கியதோடு, இறுதியில் அதுவே வெற்றிக்கான கோல் அளவாகவும் அமைந்தது.
இந்த வெற்றியுடன் உதவியுடன், லா லிகா போட்டி தரவரிசையில் றியல் மட்ரிட் அணி, மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
தரப்படுத்தல் முக்கியத்துவம் தவிர, பேல், ரொனால்டோ ஆகியோரின் கோல்களும் முக்கியமானவையாகும். இந்தப் பருவகாலத்தில் கோல்களைப் பெறத்தவறிவரும் பேல், கடந்த ஓகஸ்ட் மாதத்துக்குப் பின் றியல் மட்ரிட்டுக்காகப் பெற்ற முதலாவது கோல் என்பதோடு, இப்பருவகாலத்தில் பெற்ற மூன்றாவது கோலாகும். மறுபுறத்தில், கடந்த மூன்று போட்டிகளில் ரொனால்டோ பெற்றுக்கொடுத்த முதலாவது கோல் இதுவாகும்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago