Shanmugan Murugavel / 2016 நவம்பர் 08 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களிலொருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என ஜேர்மனி தேசிய அணியின் வீரரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் வீரருமான மெசூட் ஏஸில் பிரகடனம் செய்துள்ளார்.
போர்த்துக்கல் தேசிய அணியின் வீரரான ரொனால்டோவுடன் 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரை மூன்று பருவகாலங்கள் விளையாடிய ஏஸில், முழுமையான தொழில்முறை வீரராக ரொனால்டோ இருந்தமைக்காக, தனது முன்னாள் சக வீரரான ரொனால்டோவை புகழ ஆர்வமாயிருப்பதாகக் கூறியுள்ளார்.
றியல் மட்ரிட்டுடன் புதிய ஐந்து வருட ஒப்பந்தத்தினை ரொனால்டோ கைச்சாத்திட்டுள்ளதன் மூலம் 2021ஆம் ஆண்டு வரை றியல் மட்ரிட்டிலேயே நீடிக்கவுள்ள மூன்று தடவை பலூன் டி ஓஆரை வென்ற ரொனால்டோவுக்கான ஆரவாரத்தை நியாயப்படுத்துகிறார்.
தான், ரொனால்டோவுடன் சேர்ந்து விளையாடுவதில் மகிழ்வடைவதாகவும், ஏனெனில், ஆடுகளத்தில் சிறப்பானவராக ரொனால்டோ தன்னைக் காட்டுவதாக ஏஸில் கூறியுள்ளார். இது தவிர, ரொனால்டோவுக்கு நிறைய வாய்ப்புகள் தேவையில்லை எனவும், தான் இரண்டு பந்துகளைக் கொடுத்தால், இரண்டையும் ரொனால்டோ கோலாக்குவார் என ஏஸில் மேலும் தெரிவித்துள்ளார்.
ரொனால்டோவைப் போன்று ஒருவரையும் தான் பார்க்கவில்லையென மேலும் தெரிவித்த ஏஸில், ரொனால்டோ கடுமையாகப் பணியாற்றுவதாகவும், உடைமாற்றும் அறைக்குள் முதலாவதாக செல்லும் வீரராக ரொனால்டோவே இருப்பார் என்றும் இறுதியாக வீடு செல்லும் நபராகவும் இருக்கலாம் என ஏஸில் மேலும் கூறியுள்ளார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago