Editorial / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏமாற்றம் மற்றும் விரக்தியால் தான் கிரிக்கெட்டிலிருந்து விலகவில்லை என, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக செயற்பட தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“எந்தவொரு விரக்தியும் ஏமாற்றமும் இல்லை. மகிழ்ச்சியாகவே விடைபெறுகின்றேன். உடல் உபாதை காரணமாகவே இவ்வளவு நாட்கள் என்னால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. பயிற்சியாளராவதற்கான அனைத்து தகுதிகளையும் நான் கொண்டுள்ளேன்.” என்றும் அஜந்த மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago