Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான சுற்றுக்கு, நடப்புச் சம்பியன்கள் லிவர்பூல், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி, இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி, ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியா, பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோன் ஆகியவை தகுதிபெற்றுள்ளன.
ஒஸ்திரியக் கழகமான றெட் புல் சல்ஸ்பேர்க்கின் மைதானத்தில், நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஈ போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அக்குழுவின் வெற்றியாளர்களாக விலகல் முறையிலான சுற்றுக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தகுதிபெற்றுள்ளது. லிவர்பூல் சார்பாக, நபி கெய்ட்டா, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற, செக் குடியரசுக் கழகமான ஸ்லாவியா பிராக்குடனான குழு எஃப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற டொட்டமுண்ட், குழுவில் இரண்டாமிடத்தைப் பெற்று விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்றது. டொட்டமுண்ட் சார்பாக, ஜடோன் சஞ்சோ, ஜூலியன் பிரான்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஸ்லாவியா பிராஹா சார்பாகப் பெறப்பட்ட கோலை தோமஸ் செளசெக் பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற, பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லியுடனான குழு எச் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற செல்சி, குழுவிலிருந்து இரண்டாவது அணியாக விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்றது. செல்சி சார்பாக, தம்மி ஏப்ரஹாம், சீஸர் அத்பிலிகெட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லில்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை லொய்க் றெமி பெற்றிருந்தார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற, பெல்ஜியக் கழகமான ஜெங்குடனான குழு ஈ போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற நாப்போலி, குழுவிலிருந்து இரண்டாவது அணியாக விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. நாப்போலி சார்பாக, அர்க்கடியுஸ் மிலிக் மூன்று கோல்களையும், ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் ஒரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு எச் போட்டியில் றொட்றிகோவின் கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற வலென்சியா, குழுவிலிருந்து முதலாவது அணியாக விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற, தொடரிலிருந்து அஜக்ஸ் வெளியேற்றப்பட்டது.
இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்குடனான குழு ஜி போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமப்படுத்திய லயோன், ஆர்.பி லெய்ப்ஸிக்குக்கு அடுத்ததாக இரண்டாவது அணியாக குழுவிலிருந்து விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்றுக் கொண்டது.
லயோன் சார்பாக, ஹெளசீம் ஒளவார், மெம்பிஸ் டிபே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாக, எமில் பொர்ஸ்பேர்க், திமோ வேர்னர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற, ஏற்கெனவே விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதிபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுடனான குழு எஃப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
பார்சிலோனா சார்பாக, கார்லஸ் பெரேஸ், அன்சு பாட்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொமெலு லுக்காக்கு பெற்றிருந்தார்.
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago