Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் முதல்நிலை வீராங்கனையான அஷ்லெய் பார்ட்டி வெளியேற்றப்பட்டார்.
இன்று நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா முஷோவாவை எதிர்கொண்ட அவுஸ்திரேலியாவின் பார்ட்டி, 6-1, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை, சக ஐக்கிய அமெரிக்க வீராங்கனையான ஜெஸிக்கா பெகுலாவை தனது காலிறுதிப் போட்டியில் எதிர்கொண்ட ஜெனிஃபர் பிராடி, 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இந்நிலையில், உலகின் எட்டாம்நிலை வீரரான சக ரஷ்யரான அன்ட்ரே ருப்லெவ்வை தனது காலிறுதிப் போட்டியில் எதிர்கொண்ட நான்காம்நிலை வீரரான டனில் மெட்வெடெவ், 7-5, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
14 minute ago
3 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
19 Apr 2026