Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் உள்ளூர் 50 ஓவர் போட்டித் தொடரான விஜய் ஹஸாரே கிண்ணத்துக்கான தொடரின் சம்பியன்களாக, குஜராத் அணி சம்பியனானது. டெல்லி அணியைத் தோற்கடித்தே, அவ்வணி சம்பியனானது.
பெங்களூர் எம். சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட குஜராத் அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது.
அணித்தலைவர் பார்த்திவ் பட்டேல், தனது முதலாவது 50 ஓவர் போட்டிச் சதத்தைப் பெற்று, 105 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, ராகுல் பட் 60, சிராக் காந்தி ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், பவன் நெகி, நவ்தீப் சய்னி, சுபோத் பட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலளித்தாடிய டெல்லி அணி சார்பாக கௌதம் கம்பீர், ஷீகர் தவான் இருவரும் சறுக்க, அவ்வணி 32.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது.
பவான் நெகி 57, உன்முக்ட் சந்த் 33 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், ஜஸ்பிரிட் பும்ரா 5, ஆர்.பி சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகர்களாக, பார்த்திவ் பட்டேல், ஆர்.பி சிங் இருவரும் தெரிவாகினர்.
16 minute ago
25 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
55 minute ago
1 hours ago