Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இன்றைய முதல்நாளில், அவுஸ்திரேலிய அணி, அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஹோபார்டில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, முதல்நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 438 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
ஆரம்பத்திலிருந்தே அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அவ்வணி, முதலாவது விக்கெட்டுக்காக 11 ஓவர்களில் 75 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்தது. அதன் பின்னர் விக்கெட்டுகள் இழக்கப்பட்டு, 3 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களுடன், சற்றுத் தடுமாற்ற நிலையை அவ்வணி எதிர்கொண்ட போதிலும், இணை சேர்ந்த அடம் வோஜஸ், ஷோர் மார்ஷ் இருவரும், பிரிக்கப்படாத 317 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.
துடுப்பாட்டத்தில், அடம் வோஜஸ் ஆட்டமிழக்காமல் 174 (204), ஆட்டமிழக்காமல் ஷோன் மார்ஷ் 139 (205), டேவிட் வோணர் 64 (61), ஜோ பேர்ண்ஸ் 33 (43) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், ஜோமல் வரிக்கன் 2 விக்கெட்டுகளையும் ஷனொன் கப்ரியல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago