Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் றியோ டி ஜெனீரோ நகரில், ஓகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பித்து 17 நாட்களாக இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை இரவுடன் (இலங்கை நேரப்படி நேற்றுக் காலையுடன்) நிறைவுக்கு வந்தன. இப்போட்டிகள் எவ்வாறு ஆரம்பித்தனவோ, அவ்வாறே வாணவேடிக்கைகள் அந்நகரை வண்ணமயமாக்க, இப்போட்டிகள் நிறைவுக்கு வந்தன.
பிரேஸிலில் நிலவும் அரசியல் குழப்பநிலை, பொருளாதாரத் தேக்க நிலைமை, பாதுகாப்புத் தொடர்பான கேள்விகள், வெறுமையான மைதானங்கள், பச்சை நிறமாக மாறிய நீச்சல் தடாகம் என, பல்வேறு குழப்பங்கள் நிலவியிருந்தாலும், இந்தப் போட்டிகள் "அற்புதமானவை" என, சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் தோமஸ் பச் வர்ணிக்குமளவுக்கு, இப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
மழை பெய்த நிலையிலும் அதனோடு சேர்ந்து இடி - மின்னல் காணப்பட்ட நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள், போட்டியின் நிறைவு நிகழ்வைக் காண்பதற்காக, அரங்குக்கு வந்திருந்தனர். ஆரம்பத்தில் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தாலும், போட்டிகளோடு பின்னர் ஒருங்கிணைந்திருந்த இரசிகர்கள், மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, மைதானங்களை நிறைத்திருக்க, இம்முறை நிகழ்வுகள் நிறைவடைந்தன.
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago