2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் மரே, பெடரர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 07 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின், ஆடவருக்கான அரையிறுதிப் போட்டிகளுக்கு உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், உலகின் ஏழாம் நிலை வீரரான கனடாவின் மிலோஷ் றாவோனிச், உலகின் ஒன்பதாம் நிலை வீரரான செக் குடியரசின் தோமஸ் பேர்டிச் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

மரே, பிரான்ஸின் ஜூ வில்பிறிட் சொங்காவுடனான போட்டியில், 7-6, 6-1, 3-6,4-6, 6-1 என ஐந்தாவது செட் வரை சென்ற போட்டியில் போராடியே வெற்றி பெற்றிருந்தார். இப்போட்டியின் முதலிரண்டு செட்களையும் மரே ஓரளவு இலகுவாகக் கைப்பற்றிய போதும், அதன் பின்னர் போராட்டத்தை வெளிப்படுத்திய சொங்கா, அடுத்த இரண்டு செட்களைக் கைப்பற்றிய போதும்,  தீர்மானமிக்க ஐந்தாவது செட்டை இலகுவாகக் கைப்பற்றிய மரே, வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார்.

பெடரர்,  தனது காலிறுதிப் போட்டியில், 6-7, 4-6, 6-3, 7-6, 6-3 என்று ஐந்தாவது செட் வரை நீடித்த போட்டியில், முதலிரண்டு செட்டையும் இழந்த போதும், சுதாகரித்துக் கொண்டு அடுத்த மூன்று செட்களிலும் வெற்றி பெற்று, குரோஷியாவின்  மாரின் பேர்டிச்சிலிச்சை தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

றாவோனிச், 6-4, 7-5, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின்சாம் குராரேயைத் தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றதுடன்,  பேர்டிச்,7-6, 6-3, 6-2 என்ற  நேர் செட்களில் பிரான்ஸின் லூகா பொய்யாவை வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .