Shanmugan Murugavel / 2016 நவம்பர் 13 , பி.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அடுத்ததாக இடம்பெறவுள்ள தென்னாபிரிக்கத் தொடரில், தன்னம்பிக்கையுடன் களமிறங்கவுள்ளதாக, இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்ற இலங்கை, ஹேரத் தலைமையில் சிம்பாப்வேயில் பங்குபற்றிய தொடரை, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.அத்தொடர் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஹேரத், "அவுஸ்திரேலியத் தொடரை எடுத்துக் கொண்டால், 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றமை, சிம்பாப்வே தொடருக்காக அதிக தன்னம்பிக்கையை எங்களுக்கு வழங்கியது. தற்போது, சிம்பாப்வே அணியைத் தோற்கடித்து, 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ள நிலையில், தென்னாபிரிக்கத் தொடருக்கு அது உதவுமென நம்புகிறேன். எமது வீரர்களின் தன்னம்பிக்கை தொடர்பாக நான் 100 சதவீதம் உறுதியாக இருப்பதோடு, தென்னாபிரிக்கத் தொடரில் சிறப்பாகச் செயற்படுவார்கள் எனவும் நம்புகிறேன்" என்றார்.
சிம்பாப்வே தொடரில் தலைமை தாங்கிய ஹேரத், 2ஆவது டெஸ்டின் முதல் இனிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கெட் பெறுதியைக் கொண்ட மூன்றாவது வீரராக மாறினார்.
"அதுவொரு மிகப்பெரிய அடைவு என நான் சொல்வேன். அந்த அடைவை அடைந்த மூன்றாவது வீரர் நான் என எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், அந்தப் பெறுபேறுகள் தொடர்பாக நான் மகிழ்ச்சயடைகிறேன். சிம்பாப்வே அணிக்கெதிராக எனக்கு 5 விக்கெட் பெறுதி காணப்பட்டிருக்கவில்லை, அத்தோடு அவர்களுக்கு எதிராக நான் விளையாடிய முதற்தரமாகும். முரளி, ஸ்டெய்ன் ஆகியோருள்ள பட்டியலில் நானும் இணைந்தமை மகிழ்ச்சி" எனத் தெரிவித்தார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago