Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 27 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிறிஸ் கெய்ன்ஸூக்கெதிரான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவருக்கெதிரான வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஓர் அங்கமாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கிறிஸ் ஹரிஸ், தனது வாக்குமூலத்தை வழங்கினார்.
இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரின் போட்டிகளில், ஹைதரபாத்தில் இடம்பெற்ற போட்டியொன்றில் தங்களுடைய அணி வெற்றிபெற்றபோது, கிறிஸ் கெய்ன்ஸ் மகிழ்ச்சியாக இருந்திருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
சண்டிகார் அணியின் விக்கெட் காப்பாளரான சரப்ஜிட் சிங், 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களைக் குவித்து, 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுக் கொடுத்த போது, கிறிஸ் கெய்ன்ஸின் முகத்தில் வழக்கத்துக்கு மாறான, விநோதமான முகபாகம் காணப்பட்டதாக ஹரிஸ் தெரிவித்தார்.
சண்டிகார் அணிக்கு வழங்கப்பட்ட 136 என்ற இலக்கு, ஓரளவு இலகுவானது என வர்ணித்த ஹரிஸ், 13ஆவது ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 70 ஓட்டங்களுடன் தடுமாறிய சண்டிகார் அணியை, சரப்ஜிட் சிங், மிகச்சிறப்பான இனிங்ஸொன்றின் மூலம் காப்பாற்றியிருந்ததாக ஞாபமூட்டினார். அத்தோடு, அப்போட்டியில், சில விநோதமான சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியிருந்த லூ வின்சென்ட்-உம், குறித்த போட்டியை, போட்டி நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட போட்டியென அடையாளம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
32 minute ago