Shanmugan Murugavel / 2015 நவம்பர் 26 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில், வெற்றியை நோக்கி இந்திய அணி முன்னேறுகிறது.
2 விக்கெட்டுகளை இழந்து 32 ஓட்டங்களுடன் இரண்டாம் நாளை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 79 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஜே.பி டுமினி 35 ஓட்டங்களைப் பெற, வேறு எந்த வீரரும் 15 ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.
பந்துவீச்சில், இரவிச்சந்திரன் அஷ்வின் 5, ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் அமித் மிஷ்ரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 173 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் ஷீகர் தவான் 39, செற்றேஸ்வர் புஜாரா 31, றோகித் ஷர்மா 23 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், இம்ரான் தாஹிர் 5, மோர்னி மோர்க்கல் 3 விக்கெட்டுகளையும் சைமன் ஹாமர், ஜே.பி டுமினி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
310 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்க அணி, இன்றைய இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஸ்டியான் வான் ஸைலும் இம்ரான் தாஹிரும் ஆட்டமிழந்தனர்.
வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளை, இரவிச்சந்திரன் அஷ்வினும் அமித் மிஷ்ராவும் வீழ்த்தினர்.
போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் நாளையாகும்.
47 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago