Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாள் முடிவில், இந்திய அணி, தனது வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு விக்கெட்டை இழந்து 159 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த இந்திய அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 377 ஓட்டங்களுடன் தனது இனிங்ஸை இடைநிறுத்தி, 434 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நியூசிலாந்துக்கு வழங்கியது.
துடுப்பாட்டத்தில் செற்றேஸ்வர் புஜாரா 78, முரளி விஜய் 76, றோகித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 68, இரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 50, அஜின்கியா ரஹானே 40, லோகேஷ் ராகுல் 38 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இஷ் சோதி, மிற்சல் சான்ட்னெர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
4ஆவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூசிலாந்து அணி, இன்றைய நாள் முடிவில் 37 ஓட்டங்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் லூக் றொங்கி ஆட்டமிழக்காமல் 38, கேன் வில்லியம்ஸன் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இரவிச்சந்திரன் அஷ்வின், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
45 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago