2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

வில்லியம்ஸில் மீள இணைகிறார் மாஸா

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெர்சிடிஸ் அணியின் ஓட்டுநரான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனின் சக அணி வீரராக மெர்சிடிஸ் அணியில் பின்லாந்தின் வல்ட்டேரி போத்தாஸ் இணைந்து கொள்வது ஓரளவு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், வில்லியம்ஸ் அணியில் போத்தாஸைப் பிரதியீடு செய்வதற்காக பிரேஸிலிய ஓட்டுநரான பிலிப்பி மாஸா வில்லியம்ஸ் அணிக்குத் திரும்புவதும் ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது.

போர்மியுலா வண் சம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் கடந்த மாதம் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க் ஓய்வுபெற்றிருந்தார். இதனையடுத்து, அவருக்கான பிரதியீடாக, 27 வயதான போத்தாஸை பெறுவதற்காக வில்லியம்ஸ் அணியை மெர்சிடிஸ் அணுகியுள்ள நிலையிலேயே, தனது ஓய்வை குறைந்தது ஓராண்டுக்குத் தள்ளிப்போட 35 வயதான மாஸா வில்லியம்ஸுடன் இணங்கியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .