Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா தொடரில், ஜிரோனாவின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா தோற்றது.
பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை பெள குபர்சி பெற்றிருந்தார். ஜிரோனா சார்பாக தோமஸ் லெமர், பிரன் பெல்ட்ரன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 60 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தில் றியல் மட்ரிட் காணப்படுகின்றது. 58 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் பார்சிலோனா காணப்படுகின்றது. வில்லாறியலும், அத்லெட்டிகோ மட்ரிட்டும் தலா 45 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான போட்டி முடிவுகள் காரணமாக மூன்றாம், நான்காமிடங்களில் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட வில்லாறியல் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
16 minute ago
25 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
55 minute ago
1 hours ago