Editorial / 2019 நவம்பர் 12 , பி.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் நடைபெற்றுவரும் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் ஏழாம்நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்விடம் உலகின் முதல்நிலை வீரரான ரஃபேல் நடால் தோற்றுள்ளார்.
இன்று அதிகாலை நடைபெற்ற அன்ட்ரே அகாஸி குழுப் போட்டியொன்றில் 2-6, 4-6 என்ற நேர் செட்களில் நடப்புச் சம்பியனான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்விடம் ஸ்பெய்னின் ரஃபேல் நடால் தோல்வியடைந்திருந்தார்.
இதேவேளை, நேற்றிரவு நடைபெற்ற மற்றைய அன்ட்ரே அகாஸி குழுப் போட்டியில், 6-7 (5-7), 4-6 என்ற நேர் செட்களில் உலகின் ஆறாம்நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸிடம் உலகின் நான்காம்நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடெவ் தோல்வியடைந்திருந்தார்.
21 minute ago
46 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
46 minute ago
5 hours ago
27 Jan 2026