Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைப்பெற்ற வி.எஃப்.பி ஸ்டட்கார்ட்டுடனான போட்டியில் 1-5 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது.
டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜியோவனி றெய்னா பெற்றிருந்ததோடு, ஸ்டட்கார்ட் சார்பாக, ஸிலாஸ் வமங்கிடுகா இரண்டு கோல்களையும், பிலிப் பொர்ஸ்டர், தங்குய் குலிபலி, நிக்கொலஸ் கொன்ஸலேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், யூனியன் பெர்லினின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் முடித்திருந்தது. பயேர்ண் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்றிருந்ததோடு, யூனியன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஷா புரொமெல் பெற்றிருந்தார்.
இதேவேளை, ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் வேர்டர் பிறவுணுக்குமிடையிலான போட்டியில் அவ்வணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாக, மார்செல் சபிட்ஸர், டனி ஒல்மோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago