Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 23 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா தொடரில், ஒஸஸுனாவின் மைதானத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோற்றது.
மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை வினிஷியஸ் ஜூனியர் பெற்றதோடு, ஒஸஸுனா சார்பாக அன்டே புடுமிர், றாவுல் கர்சியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 60 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் றியல் மட்ரிட் உள்ளது. 58 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா உள்ளது. தலா 48 புள்ளிகளுடன் உள்ளபோதும் தமக்கிடையேயான போட்டி முடிவுகளால் மூன்றாம், நான்காமிடங்களில் முறையே வில்லாறியல், அத்லெட்டிகோ மட்ரிட் ஆகியன காணப்படுகின்றன. இதில் பார்சிலோனாவும், வில்லாறியலும் மற்றைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago